fire accident in fire service quarters

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள தீயணைப்புத்துறையினர் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த புத்தம் புதிய கார் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

சென்னை லயோலா கல்லூரி அருகே இருக்கும் தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியில் ஒரு புத்தம் புதிய கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர், ஆனால் கார் முற்றிலும் தீக்கிரையானது. வாங்கி ஒரு மாதமே ஆன காரில் தீப்பற்றியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இது குறித்து குடியிருப்பு பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அனைவருமே அலட்சியமாக இருந்ததாக தெரிவித்தார்.

தீடீரென கார் தீ பற்றி எரிந்ததற்கு காரணம் என்ன என நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.