மதுரை

சீர்மரபினர் சமூகத்தை சார்ந்த நிதி அமைச்சரே, சீர்மரபினருக்கு நிதி ஒதுக்காததால்  ஆட்சியர் அலுவலகத்தினர் அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். 

மதுரை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று ஆட்சியர் வீரராகவராவிடம் மனு கொடுத்தனர். 

மனு கொடுக்க வந்தவர்களில் சிலர் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் அதன் பொருளாளர் தவமணி செல்வி தலைமையில் அந்த அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். 

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில், “தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சமூகத்தினர் உள்ளனர். ஆனால், எந்த நிதி உதவியும் வழங்குவதில்லை. 

பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வெயிடப்படவில்லை. 

சீர்மரபினர் சமூகத்தை சார்ந்த நிதி அமைச்சரே, நிதி ஒதுக்காதது வருத்தமாக உள்ளது. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்க பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினோம்“ என்று கூறப்பட்டிருந்தது.