School Exams: தமிழகத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளி அளவில் இறுதித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் இறுதி தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தயாரிப்பு, தேர்வுத் தேதி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு குறித்தான பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 9, 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத் துறை மூலமாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாணவர்களே அலர்ட்.. தொழிற்கல்வி பாடத்தேர்வு கட்டாயம்.. ஆனால்..! புது விளக்கம் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை..

இதனிடையே இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் அனைத்து தேர்வுகளும், பிற பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி வரை கோடைவிடுமுறை விடப்படும். விடுமுறை முடிந்து 2022-23 கல்வி ஆண்டுக்காக ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது. அதேபோன்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. 

Revision Exam: 11 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு அறிவிப்பு.. எந்தெந்த தேதிகளில் தேர்வு கால அட்டவணை வெளியீடு..

மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் 12ம் வகுப்பு மாணர்களுக்கு ஜூன் 23ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17 ஆம் தேதியும் வெளியிடபடுகிறது. அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.