Fill vacancies with promotion - primary school teachers blockade ...

புதுக்கோட்டை

பொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்ட தொடக்கல்வி அலுவலகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைப்பெற்றது.

இதில், "பொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். 

தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள லஞ்ச போக்கை கைவிடவேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ், மாவட்ட செயலாளர் வின்சென்ட், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசுவாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.