வட சென்னை என்று சொன்ன உடனே தற்போது வெளியாகி உள்ள படத்தை பற்றி தான் விவரம் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். படம் என்பது  இயக்குனர்களின் கற்பனை கலந்த உண்மை. வெறும் மூன்று மணி நேரம் பார்க்கக் கூடிய படம் மட்டும் தான்.

ஆனால் வடசென்னை என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்தில் வட சென்னையில் மீனவர்களின் வாழ்க்கை இப்படி தான் என்று பொருள்படும் அளவில் சில காட்சிகள் இருந்ததால் அதற்கு வட சென்னை வாசிகள்  அவர்களது எதிர்ப்பை முன் வைத்தனர். சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி தற்போது அதில் இருக்கும் பல காட்சிகள் நீக்க உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதுவரை சென்னை வாசிகளுக்கே தெரியாத அற்புதமான விஷயங்கள் உள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துக்கொள்ளலம்.

முதலாவதாக, உலகிலேயே அதிக ஜீவ சமாதி இருக்கக்கூடிய இடம் வடசென்னை தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.விஞ்ஞானத்தையும் மெய் ஞானத்தையும் நன்கு உணர்ந்த சித்தர்கள் பலர், வட சென்னையில் தான் ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். அந்த குறிபிட்ட இடத்திற்கு சென்று நாம்  தரிசிக்கும் போது நம்மை மீறி நம் மனதில் பிறக்கும் ஒரு ஆற்றலை நாம் உணரலாம். வட சென்னை சென்றாலே அங்கு ஆன்மீக ரீதியிலான ஒரு உணர்வை முழுவதுமாக உணர முடியும்
 
உதாரணத்திற்கு 
 
திருவொற்றியூரில் பட்டிணத்தார் கோவில் - முன் பிறவியில் குபேரனாகவும் அடுத்த பிறவியில் பட்டிணத்தாராகவும் இருந்தார் என கூறப்படுவதை நாம் அறிந்து இருப்போம்.

இவருடைய ஜீவ சமாதி உள்ள திருவொற்றிஇர் சென்று சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானம் செய்தாலே நம்மை மீறிய ஒரு உணர்வு நமக்கு கிடைக்கும் என்கிறது வரலாறு.

அதுமட்டுமா.. இது போன்று எத்தனை ஜீவ சமாதிகள் உள்ளது தெரியுமா..?

பாட கச்சேரி ராமலிங்க சுவாமி  கோவில் 
அப்புடு சாமி கோவில் ஹை கோர்ட் சாமிகள் என்று கூறுவார்கள்
யோகேஸ்வர சுவாமி ஜீவா ஸ்வாமிகள் 
ஞானபிரகாச சுவாமிகள் 
மவுன குரு சுவாமிகள்..
முத்து கிருஷ்ண பிரம்ப சுவாமிகள் 
ஞான சுந்தர பிரம்ப சுவாமிகள்...
சிவபிரகாச சுவாமிகள்
இது போன்ற பல ஜீவ சமாதிகள் உள்ள ஒரே இடம் வட சென்னை மட்டும் தான்...ஆனால் இது போன்ற முக்கிய பல விஷயங்கள் இருப்பதை யாரும் பெரிதாக பேசவும் மாட்டார்கள், பெரிதாக தெரிவதும் இல்லை...  சென்னையில் இருக்கும் நமக்கே தெரியாத இந்த அற்புத விஷயங்களை வெளிநாட்டினர் கூட தெரிந்து வைத்து உள்ளனர் என்பது தான் உண்மை...! 

வட சென்னை என்றும் மாஸ் தாங்க..!