பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால், நடிகர் ரஜினி நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 60க்கு மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் சுமூகமான முறையில் பெப்சி அமைப்பும், தயாரிப்பாளர்களும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதுகுறித்து நடிகர் எஸ்வி சேகர் பேசுகையில் பெப்சி அமைப்பினர் பேசுவது நியாயமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.