female police cake feed to another police
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் ஏட்டு முத்துப்பாண்டிக்கு, சக பெண் போலீஸ்காரர் ஒருவர் கேக் ஊட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முனியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி சொல்பவரை அடித்து உதைத் சம்பவம் வாட்ஸ் அப் மூலம் பரவியது. இதனைத் தொடர்ந்து முனியசாமி, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஏட்டு ஒருவருக்கு, சக பெண் போலீஸ்காரர் கேக் ஊட்டும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாட்ஸ் அப் வீடியோ சில தினங்களாக வைரலாக பரவிய நிலையில், இது குறித்து விசாரிக்க காவல் துறை இறங்கியது. இந்த விசாரணையின்போது, போலீஸ் உடையில் சக ஊழியருக்கு கேக் ஊட்டும் சம்பவம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் நடந்துள்ளது என்பது தெரியவந்தது. ஏட்டு முனியசாமிக்கு, கேக் ஊட்டுபவர் ஏட்டு மாரியம்மாள்.
டீ டைமின்போது, ஏட்டு முத்துப்பாண்டிக்கு ஏட்டு மாரியம்மாள் கேக் ஊட்டியுள்ளார். இதனை சக போலீசார் படம் பிடித்து வாட்ஸ்அப் மூலம வெளியிட்டுள்ளார். அனைத்து அலு
