உண்மையிலே நாட்டை காதலிச்சு 40 CRPF வீரர்கள் இறந்த நாள் தான் பிப்ரவரி 14.. உருக்கமான வீடியோவை வெளியிட்ட நபர்.!

காதலர் தினம் மேலை நாட்டு கலாச்சாரம். இந்த மேலை நாட்டு கலாச்சாரத்தை கொண்டாடி தீர்ப்பதை விட புல்வாமாவில் தாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துங்கள் என கல்கிகுமார் என்பவர் கூறியுள்ளார். 

February 14 is the day when 40 CRPF soldiers died for the love of their country.. Viral video

பிப்ரவரி 14 மேலை நாட்டு கலாச்சாரமான காதலர் தினத்தை கொண்டாடுவதை விட புல்வாமாவில் இறந்த 40 சிஆர்பிஎப் வீரர்களை நினைத்து அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி கருப்பு தினமாக கொண்டாடுங்கள் என கல்கிகுமார் என்பவர் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு வருகிற 14-ம் தேதி நாடு முழுவதும் உலக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காதலர் தினம் மேலை நாட்டு கலாச்சாரம்.  இந்த மேலை நாட்டு கலாச்சாரத்தை கொண்டாடி தீர்ப்பதை விட புல்வாமாவில் தாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துங்கள் என கல்கிகுமார் என்பவர் கூறியுள்ளார். 

February 14 is the day when 40 CRPF soldiers died for the love of their country.. Viral video

இதுதொடர்பாக கல்கிகுமார் என்பவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார் அதில், பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையிலே நாட்டை காதலிச்சு 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த நாள் தான் பிப்ரவரி 14. இது மேலை நாட்டு கலாச்சாரம். இந்த மேலை நாட்டு கலாச்சாரத்தை கொண்டாடி தீர்ப்பதை விட புல்வாமாவில் இறந்த 40 சிஆர்பிஎப் வீரர்களை நினைத்து அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி கருப்பு தினமாக கொண்டாடுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு நீங்கள் எடுத்து சொல்வது என்னவென்றால் தேசபக்தியாக மட்டும் தான் இருக்க வேண்டும். காதலும் கலாச்சார சீரழிவுக்கு எத்தனையோ வழிகாட்டி உள்ளது. சமூக வலைத்தளத்தில் இருந்து சினிமா இயக்குனர்கள் இருந்து எல்லாருமே தப்பான வழிமுறை காட்டுவது தான் இன்றைய காலகட்டம் இருக்கிறது. தேச பக்தியை எடுத்துக் கொண்டு போகின்ற அளவிற்கு யாரும் இல்லாத மாதிரி தான் தோன்றுகிறது.

February 14 is the day when 40 CRPF soldiers died for the love of their country.. Viral video

அன்று வீமரணம் அடைந்த 40  சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் நாட்டை உண்மையாக காதலித்தார்கள். நாட்டை உண்மையாக காதலித்து இறந்தவர்கள் தான் இந்த ராணுவ வீரர்கள். அவர்களுடைய வீரமரணம் அடைந்த தினத்தை கருப்பு தினமாக கொண்டாடுவோம். காதலர் தினத்தை புறக்கணிப்போம். குறிப்பாக நாடகக் காதல் கும்பல்களே இந்த காதல் தினத்தை தான் ஒரு கருவிய பயன்படுத்துகின்றனர். 

தயவுசெய்து அவர்களிடம் விழித்துக் கொள்ளுங்கள். காதலுக்கு கண்கள் இல்லை, ஆனால் கல்விக்கு கண்கள் உண்டு. கண்கள் இல்லாத காதலை தேடி கல்வியின் கண்களை இழந்து விடாதீர்கள். அதேபோல் தினசரி காலண்டரில் உள்ள பேப்பரில் பிப்ரவரி 14 காதலர் தினம் எழுதியிருக்கும் அந்த இடத்தில் புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் நினைவு தினங்கள் அல்லது கருப்பு தினம் என வருங்கால சந்தியினருக்கு தேசபக்தியை ஏற்படுத்துவரும் வகையில் கொண்டு  வாருங்கள் என கல்கிகுமார் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios