Fear of police inquiry Parents allege that police are responsible for ...

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு அழைத்ததாலும், போலீஸின் விசாரணைக்குப் பயந்தும் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையின்போது போலீஸ் துன்புறுத்தியது தான் காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னா. இவரது மனைவி ஜெயசீலி. இவர்கள் இருவரும் சென்னையை அடுத்துள்ள திருவேற்காடு அபிராமி நகரில் தங்கி துப்புரவுத் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களின் மூன்றாவது மகன் டேவிட் (15) , மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக திருவேற்காடு காவலாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் திங்கள்கிழமையும் காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், செவ்வாய்க்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, டேவிட்டை அவரது பெற்றோர் விசாரணைக்காக காவல் நிலையத்துக்குச் செல்லுமாறு செவ்வாய்க்கிழமை (அதாவது நேற்று) காலை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் தனது அறைக்குச் சென்ற டேவிட் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று டேவிட் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விசாரணையின்போது காவலாளர்கள் துன்புறுத்தியதால்தான் டேவிட் பயந்து தற்கொலை செய்துக் கொண்டான் என்று அவரது பெற்றோற் குற்றம் சாட்டியுள்ளனர்.