Asianet News TamilAsianet News Tamil

இறந்துபோன மகன் வாங்கிய கடனை கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை...

Father suicide for asking loan bought by son
Father suicide for asking loan bought by son
Author
First Published Jan 24, 2018, 9:40 AM IST


தூத்துக்குடி

தூத்துக்குடியில் இறந்தபோன மகன் கடன் வாங்கியதாக கூறி அதனை திருப்பி  கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்துபோன தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மூவரை காவலாளர்கள் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்  அருகே உள்ள வெள்ளமடம் முத்துநகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (67). ஆட்டோ ஓட்டுநர்.

இவரது மகன் சாமுவேல், நாசரேத்தைச் சேர்ந்த வில்சன், ஜெசுரத்தினராஜ், பால்குளத்தைச் சேர்ந்த வீரக்குமார் ஆகியோரிடம்  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி, அதனை திரும்பக் கொடுத்துவிட்டாராம்.

இதனிகிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாமுவேல் விபத்தில் இறந்துவிட்டார். இந்த நிலையில், சாமுவேல் வாங்கியிருந்த பணத்தை வில்சன், ஜெசு ரத்தினராஜ், வீரக்குமார் ஆகியோர் அவரது தந்தை சின்னத்துரையிடம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர்.

இதில் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சின்னத்துரை திங்கள்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து காவலாளர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். அதில், வில்சன், ஜெசு ரத்தினராஜ், வீரக்குமார் ஆகிய மூவரின் தூண்டுதலால்தான் சின்னத்துரை தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, காவல்  ஆய்வாளர் ரேனியஸ் ஜெசுபாதம் மூவரையும் நேற்று கைது செய்தார். பின்னர், சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  சமர்ப்பித்தில், அந்த வழக்கை விசாரித்த  நீதிபதி அசோக் பிரசாத், அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலிலில் வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios