நாமக்கல்

நாமக்கல்லில், குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாததால் மனவேதனை அடைந்த தந்தை, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். 

இதுகுறித்து காவலாளர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "மனைவி இறந்ததால் தனது இரண்டு குழந்தைகளையும் சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல் தந்தை ராஜகோபால் தவித்துள்ளார் என்பதும் இதனால் மனமுடைந்த ராஜகோபால், தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்" என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாததால் மனவேதனை அடைந்த தந்தை, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.