திண்டுக்கல் அருகே தனது இரண்டு பிள்ளைகளும் இறந்த சோகத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் அருகே தனது இரண்டு பிள்ளைகளும் இறந்த சோகத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். டெய்லராக இவருக்கு லலிதா என்ற மனைவியும் மகேந்திரன், அனிதா என 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகேந்திரன் நீர்நிலையில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதந்தோறும் ரூ.50,000 வரை சம்பளத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை..

இதனால் ராமகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அனிதாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிள்ளைகள் இருவரும் இறந்த விட்டதால் வேதனையடைந்த ராமகிருஷ்ணன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்.. களத்தில் குதித்த இந்து முன்னணி கட்சி - மீண்டும் பரபரப்பு

மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் மகளின் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் வேடசந்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராமகிருஷ்ணன் மனைவி லலிதா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிள்ளைகள் இறந்த வேதனையில் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.