கடைமடைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்; எவ்வளவு நாளானாலும் போராட்டம் தொடரும் - விவசாயிகள் உறுதி...
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் திறக்க எவ்வளவு நாட்களானாலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் திறக்க எவ்வளவு நாட்களானாலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளன. இவற்றின் பாசனத்திற்கு காவிரி நீர் தான் உறுதுணையாக இருக்கிறது. மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான மேற்பனைக்காடு, ஆயிங்குடி வழியாக நாகுடி பகுதிக்கு வரும். அங்கிருந்து ஆவுடையார்கோயில், மணமேல்குடி போன்ற பகுதிகளுக்குச் சென்று மும்பாலை கிராமத்தில் முடிவடையும்.
மேட்டூரில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி காவிரி நீர் திறக்கப்பட்டது, இந்த நீரானது கல்லணை வழியாக ஜூலை 26-ல் மேற்பனைகாட்டுக்கு வந்துச் சேர்ந்தது. காவிரி நீர் தஞ்சை மாவட்டம் , கல்விராயன்பேட்டைக்கு ஜூலை 26-ல் வந்தது. அப்போது கரையில் உடைப்பு ஏற்பட்டதாம். அதனால், காவிரி நீர் வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது.
அப்போதில் இருந்து இன்று வரை வாய்க்காலுக்கு நீர் வரவில்லை. இதனால் கடைமடைப் பகுதிகளுக்கும் நீர் வராததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். "காவிரி நீர் வரவில்லை" என சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சரிடம் மனு கொடுத்தும் அதற்கும் பலனில்லை.
எனவே, நாள்தோறும் 300 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி நாகுடியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தின் எதிரே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுத் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் தண்ணீர் திறக்க எவ்வளவு நாட்களானாலும் தொடர்ந்து நடக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர் விவசாயிகள்.