farmers protest with snake meat

டெல்லியில் தமிழக விவசாயிகள் விவசாய கடன் தள்ளுபடி நதிநீர் இணைப்பு பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரை நிர்வான போராட்டம் ஒப்பாரி வைக்கும் போராட்டம் மண்டை ஓடு வைத்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தினர். கடந்த இரு தினங்களுக்கு முன் எலியை வாயில் கவ்விக்கொண்டு போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டம் குறித்து மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே நடிகர் சங்கம் சார்பில் விஷால் தலைமையிலான அணியினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி சென்று அவர்களை சந்தித்தனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து கோரிக்கையை முன் வைத்தனர்.

இதையடுத்து நேற்று திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் சிவா தலைமையில் நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்னு உள்ளிட்ட்டோர் நிதியமைச்சரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூறினர்.

ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ள வில்லை. தமிழக விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து பாம்பு கறியை வாயில் வைத்துக்கொண்டு நூதன போராட்டம் நடத்தி வருவதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.