Farmers protest in Delhi withdraws - ponrata agreement during talks between .

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் அரைநிர்வாண போராட்டம், ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்பிக்கள் மத்திய நிதி அமைச்சரையும், நீர்பாசன அமைச்சரையும் சந்திக்க வைப்பதாக உறுதி அளித்தனர். 

மேலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ள 7 நாள் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டு கொண்டனர்.

பின்னர், விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் உள்துறை அமைச்சகத்திற்கும் நிதித்துறைக்கும் உயர்மட்ட குழுவை கூட்டகோரி கடிதம் எழுதினார்.

இதையடுத்து அதன் அதிரடி நடவடிக்கையாக வரும் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.