farmers meeting in delhi says ayyakannu

தேசிய வங்கிக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பொது கூட்டம் நடைபெறவுள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

அய்யாகண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் பிரதமர் மோடி அவர்களை ஒரு நாள் கூட வந்து சந்திக்கவில்லை என குற்றம்சாட்டிய அய்யாகண்ணு தொடர்நது போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்னார் உள்ளிட்ட பலர் கேட்டுக் கொண்டதால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அய்யாக்கண்ணு, சந்தித்து விவசாயிகள் பிரச்னையை தீர்த்து வைக்கும்படி வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அய்யாகண்ணு, நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகளை திரட்டி மே 21 ஆம் தேதி டெல்லியில் பிரமாண்டமான கூட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தையோ, பிரதமர் அலுவலகத்தையோ முற்றுகையிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.