Farmers fight for relief from farmers who lost their lives due to drought ...
கடலூர்
வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்துக்கும் ரூ.3 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்துக்கும் ரூ.3 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்” உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் உழவர் சந்தை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதற்கு கடலூர் ஒன்றியம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமைத் தாங்கினார்.
கடலூர் உதவி ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் ஈடுபட ஒன்று திரண்டு வந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவலாளர்கள் அவர்களை தடையை மீறி மறியல் போராட்டம் செய்ததாக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இணை செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், ஒன்றிய தலைவர் பஞ்சாட்சரம், பொருளாளர் கடவுள், ஈ.ஐ.டி. கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு, தலைவர் மணி உள்பட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
