பிரபல பாடகர் மற்றும் குணச்சித்திர நடிகர் மாணிக்க விநாயகம் இன்று மாரடைப்பால் காலமானார்.

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே” என்ற பாடல் மூலமாக 2002ஆண்டளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்ட பாடகர்தான் மாணிக்கவிநாயகம். 

மற்ற பாடகர்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்தக்கூடிய கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான மாணிக்கவிநாயகம் திரைத்துறைக்கு வருவதற்கு முதலேயே பல பக்திப்பாடல் அல்பங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வந்துள்ளார். திரைத்துறையில் முதலாவது வாய்ப்பு கிடைத்தது இசையமைப்பாளர் வித்தியாசகர் மூலமாகதான். தில் படத்தில் ”கண்ணுக்குள்ள ஒருத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்தியாசகராலயே வழங்கப்பட்டது. 

பாடகராக மட்டுமிருந்த இவர் தனுஷின் ”திருடா திருடி” படம்மூலமாக தன்னால் நடிக்கவும் முடியுமென்று காட்டியிருந்தார். தனது முதல் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் அப்பாவாக வந்து பலரையும் கவர்ந்திருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்தார். 73 வயதாகும் பாடகர் மாணிக்க விநாயகம் இன்று இரவு மாரடைப்பால் காலமானார்.