மீண்டும் மீண்டும் கைதாகும் பிரபல கஞ்சா வியாபாரி; அட்வைஸ் பண்ணி அலுத்துப்போன போலீஸ்...
கன்னியாகுமரியில் போலீஸ் பலமுறை எச்சரித்தும் கஞ்சா தொழிலை விடாத பிரபல கஞ்சா வியாபாரி மீண்டும் கைதானார்.
கன்னியாகுமரியில் போலீஸ் பலமுறை எச்சரித்தும் கஞ்சா தொழிலை விடாத பிரபல கஞ்சா வியாபாரி மீண்டும் கைதானார். இந்த முறை எப்படி பிடிப்பட்டார் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், ஒழுகினச்சேரி, புதுகிராமத்தைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி அந்தோணி (42). பல காவல் நிலையங்களில் இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அனைத்தும் கஞ்சா வழக்குகள்.
காவலாளர்கள் பலமுறை எச்சரித்தும் கஞ்சா விற்பனை விடவில்லை. அதனால், இவரை நான்கு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடைசியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையானார்.
இவர் கஞ்சா தொழிலை விட்டுவிட்டாரா? என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு காவலாளர்கள் இரகசியமாக வேவு பார்த்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தோணி கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதை தனிப்பிரிவு காவலாளர்கள் அறிந்து கொண்டனர்.
இதனால் அந்தோணியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான திட்டத்தைப் போட்டனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த அந்தோணி நேற்று காலை அஃப்டா சந்தைப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தைதை தனிப்பிரிவு காவலாளர்கள் பார்த்தனர்.
இந்த தகவல் காவலாளர்களுக்கு கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள், அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தபின்னர் அந்தோணியையும் கைது செய்தனர். அவரிடம் காவலாளர்கள் போலீஸ் பாணியில் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.