லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு.. ஸ்கூல் டீச்சர் செய்ற வேலையா இது.. கதறும் கணவர்..!

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்(43). திமுக ஒன்றிய துணை செயலாளரான இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா(38).  இவர் குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி  ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 

Family dispute... government school teacher suicide in tirupathur

திருப்பத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பள்ளி ஆசிரியை ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்(43). திமுக ஒன்றிய துணை செயலாளரான இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா(38).  இவர் குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி  ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இதையும் படிங்க;- என்னுடைய மகனையே அடிப்பியா.. பள்ளி ஆசிரியர் என்று கூட பாராமல் ஓட ஓட விரட்டி தாக்கிய பெற்றோர்.. வைரல் வீடியோ.!

Family dispute... government school teacher suicide in tirupathur

இந்நிலையில், சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. அதேபோல், நேற்று முன்தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அனிதா ரயில்வே நிலையத்திற்கு சென்று அவ்வழியாக சென்ற அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதையும் படிங்க;-  என் பொண்டாட்டி, குழந்தையே போயிடுச்சு.. இந்த உலகத்துல எனக்கு என்ன வேலை! வேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!

Family dispute... government school teacher suicide in tirupathur

இந்நிலையில், திருப்பத்துார் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண் உடல் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Family dispute... government school teacher suicide in tirupathur

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது அனிதா என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios