fake hall ticket in neet exam

நீட் தேர்வு பலத்த பாதுகாப்புகளுடன், இன்று காலை துவங்கியது. வெளி மாநிலங்களின் தேர்வு எழுதும் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தேர்வு எழுதும் இடங்களுக்கு தங்களுடைய பெற்றோருடன் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை சேலத்தில் காலை 9 மணிக்கு வந்த ராசிபுரத்தை சேர்ந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜீவிதா என்கிற மாணவி சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில் தேர்வெழுத வந்துள்ளார். அவர் வைத்திருந்த தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் காலை ஏழரை மணியில் இருந்து எட்டரை மணிக்குள் தேர்வு மையத்துக்கு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இவர் 9மணிக்கு வந்ததால் அவரைத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க அலுவலர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து மாணவி ஜீவிதாவுக்கு ஆதரவாக மற்ற மாணவர்களின் பெற்றோரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த மாணவியின் அனுமதிச் சீட்டை வாங்கிப் பார்த்த அலுவலர்கள் அது போலியானது என்றும், அதே பதிவெண்ணில் மற்றொரு மாணவி தேர்வு மையத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து மாணவி ஜீவிதாவும் அவர் பெற்றோரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் நீட் தேர்வில் போலி ஹால் டிக்கெட் வந்தது எப்படி, இதே பதிவென்னில் தேர்வு எழுதும் மாணவி போளியானா ஹால் டிக்கெட் கொன்று சென்றாரா அல்லது ஜீவிதா வைத்திருப்பது போலியா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.