சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் சவுக்கு சங்கர் ஜோதிடர் 'ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.
சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் சவுக்கு சங்கர் ஜோதிடர் 'ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.
''அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஜோதிடம் பார்த்தவர் என்ற அடையாளத்தையும் பயன்படுத்தி பேசுகிறார். மேலும், தமிழக முதல்வர் விஜய் உடனான நெருக்கத்தின் பேரில், தமிழக அரசு டெண்டர் உள்ளிட்ட விஷயங்களை முடித்துத் தருவதாகவும், முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் கூறுவது போன்ற தகவல்கள் இடம்பெற்று இருந்தது.
இது குறித்து ரத்தன் பண்டிட் தரப்பினர் கூறுகையில், ''ரத்தன் பண்டிட் பெயரை பயன்படுத்தி இதுபோன்று பலரிடம் பணம் பெறப்பட்டு அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவரது பெயர், அவருக்கு இருப்பதாக கூறப்படும் அரசியல், திரையுலக தொடர்புகளை பயன்படுத்தி பணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராகவும், நடிகர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராகவும் ரத்தன் பண்டிட் அறியப்படுகிறார். அவர் ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகிறார். வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்களுக்கும், அரசியல் ஆளுமைகளுக்கும் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். விஜய்யின் அரசியல் வெற்றி குறித்தும் அவர் முன்கூட்டியே கணித்ததாக அவரது அறியப்படும் நிலையில், அவர் இப்போது வெளிநாட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் இதுபோன்று அவரது அடையாளத்தை பயன்படுத்தியே தற்போது சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் விஜயுடனான இவரது நெருக்கத்தை களங்கப்படுத்தி சிதைக்கும் நோக்கில் இம்மாதிரியான குற்றங்கள் நடப்பதாக சந்தேகம் நிலவுகிறது. ரத்தன் பண்டிட் பெயரை வேறு ஒருவர் பயன்படுத்தி பணம் வசூலிப்பது ஒருபுறம் இருக்க, இதன் மூலம் நேர்மையாக செயல்பட்டு வரும் ரத்தன் பண்டிட் மீதும் தேவையற்ற பழி விழும் சூழலை உருவாக்கி வருகின்றனர். ஒருவரது பெயர், புகழை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பெறுவதோடு, அவரது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயல் உள்ளது.
அரசு டெண்டர், அரசியல் பிரபலங்களை சந்திப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்து தருவதாக யாரேனும் பணம் கேட்டால், அவர்களின் அடையாளத்தையும், அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் உறுதி செய்த பின்னரே எந்தவொரு பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபட வேண்டும் என்ற எச்சரிக்கையையும் இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
ரத்தன் பண்டிட் பெயரில் வெளியாகியுள்ள இந்த மோசடி குறித்த ஆடியோ, சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று கூறி ரத்தன் பண்டிட் பெயரில் போலி வாட்ஸ்-அப் எண் உள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.


