அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு... மீண்டும் ஒரு சம்பவம்... கோவையில் உச்சகட்ட பதற்றம்!!

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

extreme tension in coimbatore due to continuous petrol bomb blasts

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி, அவரைக் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர்.

இதையும் படிங்க: உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் டிஆர்பி தேர்வு… அமைச்சர் பொன்முடி சூப்பர் தகவல்!!

அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல் பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியுள்ளனர். இதை தொடர்ந்து 100 சாலையில் அமைந்திருக்கும் பா.ஜ.க ரத்தினபுரி மண்டலத் தலைவர் மோகன்குமார் அலுவலகத்திலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்லிய தலைமை ஆசிரியர்… துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது மதுரைக்கிளை!!

இந்த நிலையில் தற்போது கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவர் வீட்டில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கு குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த சம்பவங்களால், கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் கோவை முழுவதும் சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios