விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி சாலையில் காலாவதியான ஏராளமான சாக்லேட்டுகளை யாரோ கொட்டி சென்றுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை கண்ட அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டில் கொட்டி கிடந்த சாக்லேட்டுகளை எடுத்து சாபிட்டுள்ளனர்.

சாக்லேட்டுகளை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிருந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சாலையில் காலாவதியான சாக்லேட்டுகளை கொட்டி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.