exam for Volleyball players to stay in tn hostel
கிருஷ்ணகிரி
தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் சேர கைப்பந்து விளையாட்டுக்கான வீரர்கள், வீராங்கனையருக்கான தேர்வு கிருஷ்ணகிரியில் நேற்றும் நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு விளையாட்டுகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் சேர கைப்பந்து விளையாட்டுக்கான வீரர்கள், வீராங்கனையருக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
7-ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவர்கள், 6 மாணவியர்களுக்கு மே 15-ஆம் தேதியும், 8-ஆம் வகுப்பு பயிலும் 20 மாணவர்கள், 7 மாணவியர்களுக்கு 16-ஆம் தேதியும், 9-ஆம் வகுப்பு பயிலும் 35 மாணவர்கள், 10 மாணவியர்களுக்கு 17-ஆம் தேதியும் தேர்வு நடைபெற்றது. அதேபோன்று பிளஸ் 1 பயிலும் 55 மாணவர்களும், 21 மாணவிகளுக்கும் நேற்று தேர்வு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்தப் போட்டியை பயிற்சியாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல் இம்மாத இறுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சியில் ஈடுபடுவர்.
