exam for police department finished

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் வாரியம் சார்பில், காவல் துறையில் காலியாகவுள்ள 15,664 இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்தவு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. 

இதற்காக 32 மாவட்டங்களில் மொத்தம் 410 மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு 11.20 மணிக்கு நிறைவடைந்தது. முறைகேடுகளைத் தவிர்க்க தேர்வறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. 

சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 56 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இதில் 30 ஆயிரம் பேர் பங்கேற்கு தேர்வெழுதினர். எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற காவலர் தேர்வை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். 

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்னர். தேர்விற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.