Asianet News TamilAsianet News Tamil

மாணவ மாணவிகளே... ஹாப்பி நியூஸ் இதோ... 2018-ம் ஆண்டிற்கான பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு

Exam Date to be Announced list for Plus2 plus one and 10th and timetable
Exam Date to be Announced list for Plus2, plus one and 10th and timetable
Author
First Published Jun 6, 2017, 7:48 PM IST


2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிடப்பட்டது. 

10ம் வகுப்பு 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018ம் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கான காலநேரம் 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018 மே 23ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து 11ம் வகுப்பு

11ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018 மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தேர்வுக்கான முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 1-இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பாட வாரியான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
மார்ச் 1 - தமிழ் முதல்தாள்

மார்ச் 2 - தமிழ் 2ம் தாள்

மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்

மார்ச் 9 -  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

மார்ச் 12 -  கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல் 

மார்ச் 15 -  அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு

மார்ச் 19 -  இயற்பியல் மற்றும் பொருளியல்

மார்ச் 26 -  வேதியியல், கணக்கு பதிவியல்

ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்  

பொது தேர்வெழுதும் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாட வாரியான தேர்வு அட்டவணையில் இதில்  வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios