EVKS Ilangovan press meet
நரேந்திர மோடியின் மேஜிக் வேலை எல்லாம் இனி இந்தியாவில் எடுபடாது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ், இளங்கோவன் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கூட்டண இல்லாமல் உந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டபோது, 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

ஆனால் அதன் பிறகு 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவரும் அளவுக்கு அக்கட்சி வளர்ச்சி அடைந்தது என தெரிவித்த ஈ.வி.கே.எஸ், இளங்கோவன், அது போல் மீண்டும் எழுச்சி பெறும் என்று கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி மேஜிக்..கேடி மேஜிக் எல்லாம் எடுபடாது என தெரிவித்த ஈ.வி.கே.எஸ், இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்திய அரசு அமையும் என உறுதிபடத் தெரிவித்தார்.
