Escalator figure murder case Saran quartet Four arrested Who was killed
காஞ்சீபுரம்
காஞ்சீபுரத்தில் கொலை செய்யப்பட்ட தே.மு.தி.க. பிரமுகர் கொலை வழக்கில் ஏற்கனவே நால்வர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் மூவர் உள்பட நால்வரை காவலாளர்கள் தேடிக் கண்டுபிடித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (38). தே.மு.தி.க. தலைமைக் கழகப் பேச்சாளர். இவரைக் கடந்த 6–ஆம் தேதி மர்மகுழு ஒன்று வெட்டி படுகொலை செய்தது.
இந்தச் சம்பவம் குறித்து பெரிய காஞ்சீபுரம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தீவிரமாகத் தேடினர்.
இதனிடையே சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் வேலூர் மாவட்டம் காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தின் தாமாக சரணடைந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காஞ்சீபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி காவலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் காஞ்சீபுரம் கீழம்பி பைபாஸ் சாலையில் கொலை குற்றவாளிகள் பதுங்கி இருக்கின்றனர் எண்ட்ர தகவல் பெரிய காஞ்சீபுரம் காவலாளர்களுக்கு நேற்று கிடைத்தது.
அந்த தகவலில் பேரில் காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்று பதுங்கி இருந்த கொலைக் குற்றவாளிகளைப் பிடித்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் காஞ்சீபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த நவீன் (எ) நவீன்குமார் (26), அசோக்குமார் (19), அஜித் (எ) சதீஷ்குமார் (19), ஒக்கபிறந்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (எ) பெருமாள் (20) என்பது தெரிந்தது. மேலும், இவர்கள்தான் சரவணன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதில், அசோக்குமார், அஜித், ராஜேஷ் ஆகிய மூவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவலாளர்கள் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவுப் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
