திமுகவினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் போலி ரூபாய் நோட்டுகள் பறக்கவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய அரசு கடந்த 8ம் தேதி இரவு, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனை கண்டித்தும், மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப்ப்பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி தாம்பரம் திமுக சார்பில், பல்லாவரத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு நீண்ட வரிசையில் கைக்கார்த்து நின்றனர்.

தாம்பரத்தில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் தி.மு.க.வினர் திடீரென பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசில் இருந்து போலி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நடிகர், நடிகைகள் படத்துடன் பறந்து சாலைகளில் விழுந்தன. இவை பார்ப்பதற்கு அசல் ரூபாய் நோட்டுகள் போல இருந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.