Kallakurichi : கலெக்டர் உண்மையை சொல்லியிருந்தால் இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள்- சீறும் எடப்பாடி
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொலைபேசியிலும், நேரிலும் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பொய்யான தகவலை கூறிய ஆட்சியர்
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கியது. காலை கேள்வி நேரத்தின் போதே அதிமுகவினர் விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக பிரச்சனை எழுப்பினர். தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் அனைத்து மருந்துகளும் மருத்துவமனையில் இருக்கிறது என்று கூறுகிறார் அது பச்ச பொய்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அங்கு இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித்தலைவர் 19ஆம் தேதி மூன்று பேர் இறந்த போது செய்தி வெளியிடுகிறார். வயிற்றுப்போக்கு வயிற்று வலியால் இறந்தார் என்று கூறுகிறார். வலிப்பு ஏற்பட்டிருந்ததாக ஒரு மாவட்ட ஆட்சியர் பொய் கூறுகிறார்.
ராஜினாமா செய்திடுக
மாவட்ட ஆட்சியர் உண்மையை பேசியிருந்தால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று இருப்பார்கள். மற்ற அதிகாரிகள் எல்லாம் சஸ்பன்ட் செய்தார்கள் கலெக்டரை மற்றும் டிரான்ஸ்வர் செய்து உள்ளனர் என்று கேள்வி எழுப்பியவர், அரசு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிக அளவு விற்பனையாவதால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என 29 3/2023 அன்று அவையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் சட்டப்பேரவைத் தலைவருக்கு கவனம் பெற்று தீர்மானம் கொண்டுவர வேண்டும் என மனு கொடுத்துள்ளார் அதையும் நிராகரித்தது.
எஸ்பியிடம் புகார்
பொதுப்பணித்துறை அமைச்சர் பேட்டி கொடுக்கும்போது கூறுகிறார் எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தால் இந்த கள்ளச்சாராயணத்தை தடுத்து நிறு நிறுத்தி இருப்போம் என தெரிவிக்கிறார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொலைபேசியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து நேரிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனையாகி வருகிறது எனவும் அதை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்
கண்டுகொள்ளதாக கூட்டணி கட்சிகள்
விஷச்சாராயம் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதை எல்லாம் கண்டு கொள்ளாத திமுக கட்சி கூட்டணி கட்சிகள் உள்ளதாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மையப்பகுதியில் எப்படி மூன்று ஆண்டுகளாக சாராயம் விற்க முடியும். இரண்டு திமுக கவுன்சிலர்கள் இதற்கு உடனடியாக இருந்துள்ளனர். கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக திமுக குறிக்கோளாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.