enforcemnet notice friends of shekar reddy
பணபரிமாற்ற வழக்கில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகததால் அவர்களுக்கு மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி சிபிஐ தொழிலதிபர் சேகர் ரெட்டியைகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தது. மேலும் அவரது கூட்டாளிகள் பிரேம்குமார், சீனிவாசலு,திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து 5 பேரும் ஜாமீன் கோரி மனு அளித்தனர். சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் மார்ச் மாதம் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரையும் அமலாக்கத்துறை திடீரென கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

பின்னர், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்று பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.
அதில் நாள்தோறும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என தெரிவித்தது.
ஆனால் மூன்று பேரும் ஆஜராகததால் அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து சேகர் ரெட்டி நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார்.
ஆனால் ராமச்சந்திரனும், ரத்தினமும் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அவர்கள் இருவருக்கும் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
