அமலாக்க துறை அதிகாரி அங்கீத் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி..! நீதிமன்றம் அதிரடி- அதிர்ச்சியில் மத்திய அரசு
அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை அதிகாரி, அங்கீத் திவாரி தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று வாதிட்டார். அப்போது அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும் என தெரிவித்தார்.
மேலும் 20லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட வேண்டி உள்ளது. மேலும் அங்கித் திவாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனவே அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையதுத்உ நீதிபதி இன்று ஜாமின் மனு மீது தீர்ப்பு வழங்கினார். தற்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவஞானம் அங்கீத் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.