அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது.. வழக்கு சிபிஐக்கு மாற்றமா? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன?
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரி பணியாற்றி வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கையும் களவுமாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இவரை நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- Ankit Tiwari: லஞ்சம் பெற்று சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி; சிக்கிய ஆவணங்கள்; லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்.!
இதனையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக நுழைந்து விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். சுமார் 13 மணிநேரம் நடைபெற்ற சோதனையானது இன்று காலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த 13 மணிநேரம் சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது?
மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலத்திற்குள் 30 நாட்களாக பதிவாகியுள்ளன சிசிடிவி காட்சிகளைத்தர அமலாக்கத்துறை மறுத்ததன் காரணமாகவே சோதனை நீடித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் மாநில போலீசார், அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.