அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் விழாவில் புதிய ஐபோன் 15 இன்று வெளியீடு! தரமான மொபைல் தாறுமாறான விலையில்!
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்த நடவடிக்கை சட்டப்படி மேற்கொள்ளப்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை. அதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை! 417 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கின்றனர். இவர் யார், இவரைத் தெரியுமா என்பது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.
நாமக்கல், திருச்சி, கரூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் மணல் ஒப்பந்ததாரர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.