டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை! 417 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் 417 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தமிழக அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தில் 417 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மண்டல வாரியாக அரசுப் போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றன. விழுப்புரம், கோவை, நாகர்கோவில், சேலம், எம்.டி.சி சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து கழகங்களில் 417 பணியிடங்கள் (பயிற்சி) காலியாக உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி:
335 பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் துறையில் டிப்ளமோ படித்தவர்களும் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களும் மட்டும் விண்ணப்பிக்கலாம். 82 காலிப் பணியிடங்களுக்கு B.A., B.Sc., B.Com., B.B.A. / B.C.A. ஆகிய பிற பட்டப் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சர்டிபிகேட் தொலைஞ்சுருச்சா! கவலையை விடுங்க... ஆன்லைனில் எளிதாக டவுன்லோடு செய்யலாம்!
சம்பளம்:
இந்தப் பயற்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஓராண்டு பணி நியமனம் பெறுவார்கள். என்ஜினியரிங் முடித்த பயிற்சிப் பணியாளர்களுக்கு ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும். டிப்ளமோ முடித்த டெக்னிஷயன் பயிற்சிப் பணியாளர்களுக்கு ரூ.8,000 ஊதியம் கிடைக்கும். என்ஜினியரிங் அல்லாத பிற பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் ரூ.9,000 ஊதியமாகப் பெறலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்படும். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். https://boat-srp.com/tnstc2023/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றி கூடுதல் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.
boat-srp.com/wp-content/uploads/2023/09/TNSTC_2023_24_8_Regions_Notification.pdf
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.10.2023
மொத்தம் 7547 பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. முழு விவரம் இதோ..