Asianet News TamilAsianet News Tamil

மொத்தம் 7547 பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. முழு விவரம் இதோ..

டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Police Constable Recruitment 2023 : 7547 Vacancy apply online berfore this date Rya
Author
First Published Sep 11, 2023, 9:09 AM IST

டெல்லி காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களின் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7547 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படும். 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் டெல்லி காவல்துறையில் சேர விருப்பம் உள்ளவர்கள் டெல்லி போலீஸ் ஆட்சேர்ப்பு 2023 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.ssc.nic.in என்ற இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ssc.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 2,000 காலியிடங்கள்.. எஸ்பிஐ வங்கியில் வேலை.. என்ன தகுதி? முழு விவரம் இதோ..

முக்கிய தேதிகள்

ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள் : செப்டம்பர் 1, 2023 
ஆன்லைன் பதிவு முடிவடையும் நாள் : 30 செப்டம்பர் 2023 
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 30, 2023 (இரவு 11 மணி)

டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் 2023 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ. 100/-. இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான அனைத்து பெண் வேட்பாளர்களுக்கும், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. நெட்-பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் BHIM, UPI போன்ற ஆன்லைன் கட்டண முறைகள் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும்.

தகுதி : 

விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளி வாரியத்திலிருந்து 10 மற்றும் + 2 (12-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02-07-1998க்கு முன்பும், 01-07-2005க்கு பிற்பகுதியிலும் பிறந்திருக்கக் கூடாது. 

சரியான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். இந்த பணிகளுக்கான தேர்வு செயல்முறை

  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் சோதனை (PET)
  • உடல் அளவீட்டு சோதனை (PMT)
  • ஆவணங்கள் சரிபார்ப்பு
  • மருத்துவ பரிசோதனை.

எப்படி விண்ணப்பிப்பது?

  • டெல்லி காவல்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான delhipolice.gov.in ஐ பார்வையிடவும்
  • இணையதளத்தில் "Recruitments” பிரிவை கிளிக் செய்யவும்.
  • ஆட்சேர்ப்புப் பிரிவின் உள்ளே, 'Constable (Executive) Online Application Forms.' என்று விருப்பத்தை கிளிக் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்ப வழிமுறைகளின்படி தேவையான அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
  • வழங்கப்பட்ட ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • விண்ணப்ப செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் விண்ணப்பப் படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யும்

Follow Us:
Download App:
  • android
  • ios