கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்து, வங்கிக்கணக்கு ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியது.

கிருத்திகா உதயநிதியின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியது. மேலும் கிருத்திகாவின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் ரூபாய்ம் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு சொந்தமான கல்லல் குரூப் பவுண்டேசனில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் சொத்துக்கள், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இதையும் படிங்க : இதை செய்தால் போதும் அமுல் அல்ல யார் வந்தாலும் ஆவினை அசைக்க முடியாது - வானதி சீனிவாகன் அறிவுரை

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள கல்லல் அறக்கட்டளை நிர்வாகியும், வழக்கறிஞருமான பாபுவுக்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான பாபுவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நிலையில் இன்று கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்து மற்றும் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : செங்கோலை வைத்து மோடியும், அமித்ஷாவும் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கின்றனர் - நாராயணசாமி குற்றச்சாட்டு