செங்கோலை வைத்து மோடியும், அமித்ஷாவும் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கின்றனர் - நாராயணசாமி குற்றச்சாட்டு
செங்கோலை வைத்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிப்பதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் நேரு நினைவு தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமார மங்கலம், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம். பி. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிலை தலைவர் மோகன் குமார மங்கலம், 9-ஆண்டு காலம் மோடி ஆட்சி குறித்து ஒன்பது கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை எந்த ஒரு பதிலும் மோடி அரசு சொல்லவில்லை. தற்போது நாட்டில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 430 ரூபாய் விற்ற சிலிண்டர் தற்பொழுது 1200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 71 ரூபாய் விற்ற பெட்ரோல் 100 ரூபாய்க்கும், 83 ரூபாய்க்கு விற்ற டீசல் 97-ரூபாய்க்கும் 35 ரூபாய் விற்ற பால் 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என குற்றம் சாட்டினார்.
ஈரோட்டில் தலைக்கேறிய போதையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்; போக்குவரத்து பாதிப்பு
பணமதிப்பிழப்பு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பாஜக அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளார்கள். விவசாயிகள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். போராட்டத்தில் ஏழு விவசாயிகள் இறந்தார்கள். அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை கூட கொடுக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 164 வது இடத்தில் இருந்த அதானி தற்போது பாஜக அரசில் இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி? விரைவில் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள் என்றார்.
குடும்ப தகராறில் காதல் மனைவி தலையில் கல்லை போட்டு கொடூர கொலை - காவல்துறை விசாரணை
இதை தொடர்ந்து பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, செங்கோல் என்பது அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதே மவுண்ட்பேட்டன் பிரபு கொடுக்கவில்லை. ஆட்சி மாற்றம் நடந்ததற்கு ஆதாரமாகத்தான் செங்கோல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். அதற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை. இந்திய வரலாற்றை மோடியும், அமித்ஷாவும் மாற்ற நினைப்பதாக குற்றம் சாட்டிய அவர் இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை பாஜக அரசு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.