ரயில் பயணங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் சென்று வருகின்றனர். முதியவர்கள் கோயில் சுற்றுலா, கல்லூரி மாணவர்கள், சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் அரசு துறை ஊழியர்கள் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பெரும்பாலும், முதியோர் வெளியே செல்லும்போது அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மட்டுமின்றி மருந்து, மாத்திரைகளையும் கொண்டு செல்வார்கள். ஆனால், சில சமயங்களில் அவர்கள் செல்லும் இடத்தில் காலதாமதம் ஏற்படும் சூழலில், மருந்து மற்றும் மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், கடும் சிரமம் அடைகின்றனர்.

அதே வேளையில் மாவட்டத்தில் கிடைக்கும் ஒரு மாத்திரை, மற்றொரு மாவட்டத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும், வேறு கம்பெனியின் பெயரில் இருக்கும். இதனால், அதை வாங்கலாமா, வேண்டாமா என குழப்பம் அனைவரிடமும் நீடிக்கும்.

இதுபோன்ற சூழல்களை சமாளிக்க தற்போது, இந்தியா முழுவதும் 400 ரயில் நிலையங்களில் மருந்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் மேத்தா 09320955005 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும், அடுத்த ரயில் நிலையம் வந்தவுடன், நமக்கு தேவையான மாத்திரை கிடைத்துவிடும்.