Asianet News TamilAsianet News Tamil

12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக்கல்வித்துறை!!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் இமெயில் ஐடி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Email ID is mandatory for class 12 govt school students says school education dept
Author
First Published Jan 6, 2023, 9:43 PM IST

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் இமெயில் ஐடி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் எனப்படும் மெயில் ஐடி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரங்கள் உள்ளே!

இதனால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் ஐடியை உருவாக்கும் பணிகளை வரும் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதன் மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்ப முடியும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு... முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கும் நிலையில் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios