மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு? இதோ முழு தகவல்..!
தமிழகத்தில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மின்வாரம் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வின் முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.
* அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிஎண்.222-ன்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன்அடைவர்.
* தற்பொழுது குடிசை. விவசாயம். கைத்தறி, விசைத்தறி வழிப்பாட்டுதலங்கள். மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
* இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5/- வரை மட்டுமே உயரும்.
* இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15/- வரை மட்டுமே உயரும்.
* இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25/- வரை மட்டுமே உயரும்.
* இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.
* 2.19 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.