Asianet News TamilAsianet News Tamil

சென்னைக்கு வந்துடுச்சி "எலக்ட்ரிக் பஸ்" - இனிமே இரைச்சலும் இல்ல... புகையும் இல்ல...!!

electric bus-in-chennai
Author
First Published Oct 19, 2016, 12:20 AM IST


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அசோக் லைலேண்ட் நிறுவனம் இந்த பேருந்தை தயாரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு இல்லாதது, சத்தம் குறைவு, போக்குவரத்து நெரிசலில் மின்தேவை பயன்பாடு குறைவாக இருக்கும் ஆகியவை இந்த பேருந்தின் சிறப்பம்சமாகும்.

electric bus-in-chennai

3 மணி நேரத்துக்கு பேட்ரியை சார்ஜ் செய்து, 150 கி.மீ முதல் 300 கி.மீ வரை இந்த பேருந்தை இயக்க முடியும் என்றும், இந்த பேருந்தை பாரம்பரிய இடங்களிலும், மலைப்பாங்கான இடங்களிலும் பயன்படுத்த முடியும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ஒன்றரை கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், இதன் விலை இன்னும் முடிவு செய்யவில்லை என அந்நிறுவனம் தொிவித்துள்ளது. 

ரூ, 500 கோடி முதலீட்டில் 7 இடங்களில் தொழிற்சாலை அமைத்து, இந்த  எலக்ட்ரிக் பேருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், சுற்றுப்புற சூழல் மாசு அதிகமுள்ள இடங்களை அடையாளம் கண்டு, அங்கு இந்த பேருந்தை இயக்க உள்ளதாகவும் அசோக் லைலேண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios