அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம்
ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் வருகின்ற ஜனவரி 16ம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. அதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.
Vaikuntha Ekadashi 2023: ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்
அந்த வகையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்படப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பெற்றுக் கொண்ட நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே கிடையாது என்று கூறி அந்த கடிதத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கே அனுப்பிவிட்டனர்.
உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
இது தொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த விளக்கத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.