Eight Indian fishermen apprehended by Sri Lankan Navy

செவ்வாய்க்கிழமை இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மன்னார் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, கடந்த வாரம் அக்.12ம் தேதி 5 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து போலீஸார் வசம் ஒப்படைத்தனர். மன்னார் நீதிமன்ற ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை அக்.25ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று காலையும் எல்லை தாண்டி வந்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ளது இலங்கைக் கடற்படை.