இலங்கை சிறையில் இருந்து 77 மீனவர்களையும் 44 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகப்பட்டினம், காரைக் கால் ஆகிய 4மாவட்டங்களைச் சேர்ந்த 92 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை கைது செய்யப்பட்ட இவர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தி வந்தார். இதைதொடர்ந்து மத்திய அரசு வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் இலங்கை வலியுறுத்தியது.

இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு தமிழகத்தை சேர்ந்த் 77 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

இதனால் இலங்கை சிறையில் இருந்து 75 மீனவர்களையும் 44 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீதமுள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.