ரூ.300 கோடி மதிப்பீட்டில் 2200 ஏரிகள் தூர் வாரப்படும் மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு காப்பீட்டு முறையில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

உதகையில் உள்ள பூங்காவை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி கோவைக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சாலை வழி பயணமாக உதகை செல்ல உள்ளார்.

கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

1519 குடிகிராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரத்தில் மேட்டூர் அணையிலும் தூர் வாரப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2200 ஏரிகளை தூர் வார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை தர வேண்டும் என திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுபட்டு போன விவசாயிகளுக்கு உடனே இடுபொருள் மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கால் நடைகளுக்கு தீவனம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிரமமின்றி மக்களுக்கு குடிநீர் வழங்க போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.