வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி உறவினர்? இவ்வளவு கோடி வரி ஏய்ப்பா? அதுமட்டுமல்ல!

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்.ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டாத ரூ.10 கோடி ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Edappadi Palanisamy relative evades tax of Rs.750 crore tvk

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்.ராமலிங்கம். இவர்  ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை திட்டம், நீர்பாசன கால்வாய் திட்டம் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டுமான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதையும் படிங்க; கொங்கு மண்டலம் உங்கள் கோட்டைனு சொன்னீங்க! திட்டமிட்டே பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கும் இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!

இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் என்.ராமலிங்கத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கடந்த 5 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவு பெற்றது. 

இந்த தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.10 கோடி ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை சோதனை என்.ராமலிங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க;  பொதுமக்களே பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படினா உங்க ஊர் பஸ் எங்கு நிற்கும் தெரியுமா?

மேலும் நிறுவனங்களின் பெயர்களிர் போலிக் கணக்குகளை தொடங்கி வரி ஏய்பு செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை சோதனை என்.ராமலிங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios