MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொங்கு மண்டலம் உங்கள் கோட்டைனு சொன்னீங்க! திட்டமிட்டே பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கும் இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!

கொங்கு மண்டலம் உங்கள் கோட்டைனு சொன்னீங்க! திட்டமிட்டே பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கும் இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்து கே.சி.பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 12 2025, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Erode East By election

Erode East By-election

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு  பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
DMK Candidate

DMK Candidate

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், அக்கட்சி சார்பில் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திமுக போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது மட்டுமல்லாமல் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார்.

37
AIADMK

AIADMK

இதனையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போல புறக்கணிக்குமா? என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.

47
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

அதில், நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அதிமுக புறக்கணிக்கப்பதாக விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி பாஜகவுக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். 

57
KC Palanisamy

KC Palanisamy

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடவில்லை என்று சொல்வது பணம் செலவாகும் என்று பணத்தை பாதுகாக்கவா? அப்படி இருந்தால் நீங்கள் 4 வருடம் ஆட்சியில் இருக்கும் போது கட்சி நிதி என்று உருவாக்கினீர்களே அது என்ன ஆனது? லாபம், நஷ்டம் கணக்கு பார்க்க நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா அல்லது கட்சி  நடத்துகிறீர்களா?

67
Kongu Zone

Kongu Zone

கொங்கு மண்டலம் உங்கள் கோட்டை என்று சொல்கிறீர்கள், வெற்றியோ தோல்வியோ ஆளும் கட்சியின் பணபலம், படைபலம், அராஜகங்களை எல்லாம் தாண்டி கடுமையாக போட்டியிட்டு ஒரு கணிசமான வாக்கு வங்கியை பெறவேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக என்று இருந்ததை தெரிந்தே மாற்று சக்தியான NDA கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கிறீர்கள். அப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கும் தற்போது பாஜகவுக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள்.

77
AIADMK BJP

AIADMK BJP

அதிமுகவை இப்படியே தேர்தல்களில் போட்டியிடாமல் வைத்துக்கொள்கிறோம் அந்த இடத்தில் எல்லாம் நீங்கள் போட்டியிட்டு உங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளுங்கள்" என பாஜகவுடன் ஏதேனும் மறைமுக ஒப்பந்தம் வைத்துளீர்களா? அல்லது உங்களை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே கட்சி இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
திமுக
பிஜேபி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thevar Guru Pooja : தேவர் குருபூஜை ஏன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது? வரலாறும், பின்னணியும்!
Recommended image2
Seeman : எலெக்‌ஷன் ரிசல்டால் ரஜினி ரொம்ப வருத்தப்பட்டார் - சூப்பர்ஸ்டாரை சிக்கலில் சிக்க வைத்த சீமான்
Recommended image3
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved