தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மணல் குவாரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 7 புதிய மணல் குவாரிகளை திறக்க உள்ளார். இதற்கான சுற்று சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மணல் குவாரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் எனவும், ஆற்றில் மணல் அள்ளப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், 7 புதிய மணல் குவாரிகளை திறக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். இதற்கான சுற்று சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆற்றங்கரை அருகே விற்பனை நிலையம் அமைத்து மணல் விற்கப்படும் எனவும், மணலுக்கான தொகை கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிபிட்டுள்ளது.

புதிய முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் பக்கத்து மாநிலங்களுக்கு மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வருவாய் துறை, காவல் துறையினரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் செயற்கை மணல் குவாரிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.